இங்கிலாந்தின் கேன்டர்பரி (Canterbury) நகரில், 14 வயது சிறுமியை தவறான நோக்கத்திற்காகச் சந்திக்க வந்த 50 வயது நபர் ஒருவர், சிறுவர் வன்கொடுமையாளர்களுக்கு எதிராகச் செயல்படும் ‘பீடோஃபைல் ஹண்டர்ஸ்’ (Pedophile Hunters) குழுவினரிடம் கையும் களவுமாகச் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட அந்த நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை.
ஆன்லைன் மூலமாக 14 வயது சிறுமி என நினைத்து ஒருவரிடம் சாட்டிங் செய்து வந்த அந்த நபர், அச்சிறுமியை நேரில் சந்திக்க வற்புறுத்தியுள்ளார். மேலும், சந்திப்பிற்கு வரும்போது உள்ளாடைகள் அணியாமல் வர வேண்டும் என்றும், தனக்கு இருக்கும் வக்கிரமான சிறுநீர் ஆசை (Urine Fetish) குறித்தும் அநாகரிகமாகப் பேசியுள்ளார்.
Just now in Canterbury
A 50 year old Indian man thought he was meeting a 14 year old girl to abuse her.
He instructed the child not to wear underwear and that he had a urine fetish.
Instead of a child, he is met by paedophile hunters who detain him until police arrest him. pic.twitter.com/mY8JZW29Di
— This Is England (@EnglandThisIs) June 27, 2026
சிறுமியைச் சீரழிக்கும் வெறியோடு அவர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது, அங்கு அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே சிறுமிக்கு பதிலாக, ஆன்லைனில் சிறுமி போல நடித்து அந்த நபரை வரவழைத்த ‘பீடோஃபைல் ஹண்டர்ஸ்’ குழுவினர் ரகசியமாகக் காத்திருந்தனர். அந்த நபரைச் சூழ்ந்து மடக்கிய அக்குழுவினர், அவர் தப்பியோட முடியாதபடி அங்கேயே சிறைபிடித்து வைத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இங்கிலாந்து போலீசார், அந்த 50 வயது நபரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் குறித்த பரபரப்புத் தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
