திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறிய விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திமுகவுக்கு அடுத்த மாபெரும் மரண அடியைக் கொடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஒரு அதிரடியான மாஸ் பிளானை கையில் எடுத்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இது ஒட்டுமொத்த அறிவாலய வட்டாரத்தையும் திகைக்க வைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதோடு, அதனை திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே நின்றுதான் போட்டியிட வேண்டும் என்று திமுக மேலிடம் கடுமையான நிபந்தனை விதித்துக் கட்டாயப்படுத்தியது. சொந்தச் சின்னம் இல்லாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அப்போதே மதிமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய மனக்கசப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தேர்தல் முடிவில், மதிமுக வேட்பாளர்கள் கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய 2 தொகுதிகளில் மிகக் கடினப்பட்டு வெற்றி பெற்றிருந்தனர்.இந்நிலையில், “உதயசூரியன் சின்னத்துல நிக்க வச்சப்பவே எங்க மனசு மொத்தமா உடைஞ்சு போச்சு” என்று வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது திமுக கூட்டணி இனிமேல் நமக்கு வேண்டாம் என்று மதிமுக உயர்நிலைக் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு விட்டதால், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அந்த 2 மதிமுக எம்.எல்.ஏ.க்களையும் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்ய வைக்க வைகோ அதிரடித் திட்டம் தீட்டியுள்ளார்.
திமுகவின் சின்னத்தில் பெற்ற பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தவெக-வுடன் தூய்மையான புதிய கூட்டணியை அமைக்க மதிமுக எடுத்துள்ள இந்த ஆக்ரோஷமான முடிவு, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாத அனலைக் கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
