தமிழக முதலமைச்சர் மற்றும் நடிகரான ஜோசப் விஜய்யின் மகள் திவ்யா சாஷா மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த திவ்யாவை, அவரது தாயார் சங்கீதா கட்டிப்பிடித்து ஆதரவு தெரிவிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சங்கீதாவும் திவ்யாவும் தற்போது லண்டனில் இருப்பதாக ஒரு தரப்பினரும், இது பழைய வீடியோ என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்குப் பிறகு இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 26 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நோக்கில், கணவரின் தவறான உறவைச் சுட்டிக்காட்டி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
#ThalapathyVijay‘s Wife #Sangeetha and his daughter #DivyaSasha ❤️#CMJosephVijaypic.twitter.com/Vbpv8bFSCm
— Movie Tamil (@_MovieTamil) June 24, 2026
“>
இதனால், நடிகர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் சங்கீதாவும் அவரது குழந்தைகளும் கலந்துகொள்ளவில்லை. 1999-ம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களின் குடும்ப விவகாரங்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
