மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாகச் சுவர்கள் இடிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், திறந்திருக்கும் மேன்ஹோல்கள் (மழைநீர் வடிகால் மூடி) குறித்து மேயர் அதிகாரிகளை உலுக்கியெடுத்துள்ளார். நகரில் எந்தவொரு மேன்ஹோலாவது திறந்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் (பணி இடைநீக்கம்) செய்யப்படுவார்கள் என மேயர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#Watch: Mumbai Civic Body Worker Falls Into Manhole In Front Of Mayorhttps://t.co/FllRgIv6ZM pic.twitter.com/1KL4f7o55n
— NDTV (@ndtv) June 24, 2026
இதுகுறித்து என்டிடிவி ஊடகத்திடம் பேசிய பிஎம்சி அதிகாரி தாவ்டே, வடிகாலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காகவே மேன்ஹோல் மூடி தற்காலிகமாக மாற்றப்பட்டதாகக் கூறினார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த ‘அலர்ட்’ (எச்சரிக்கை) போர்டுகளையும், தடுப்புகளையும் மக்கள் பார்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பிஎம்சி சார்பில் வைக்கப்படும் அறிவிப்புகளை மும்பை மக்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றப் பல பம்புகள் பொருத்தப்பட்டு, கழிவுகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
