ஜப்பானில் உள்ள ஒரு பெண்கள் சிறையின் உள் கட்டமைப்பு மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பொதுவாகச் சிறைச்சாலை என்றாலே அசுத்தம், நெரிசல் மற்றும் பயமுறுத்தும் சூழல் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஜப்பானிய பெண்கள் சிறையின் வீடியோ அந்த பிம்பத்தையே மாற்றியமைக்கும் வகையில் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறது.

“>

இதனால் இங்குள்ள பெண் கைதிகளுக்குக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டாலும், அவர்களுக்குத் தேவையான ஆடைகள், தங்குவதற்குக் பாதுகாப்பான இடம் மற்றும் சத்தான உணவு போன்றவை தடையின்றி வழங்கப்படுகின்றன. மேலும், கைதிகள் வெளியில் சென்ற பிறகு சுயசார்புடன் வாழ்வதற்காகப் பல்வேறு தொழில்முறை பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

இந்த சிறையில் இளம் வயது கைதிகளை விட, வயதான பெண் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. ஜப்பானில் நிலவும் கடுமையான தனிமை மற்றும் ஆதரவற்ற நிலை காரணமாக, பல முதிய பெண்கள் தங்களுக்குப் புகலிடம் தேடி, திட்டமிட்டே சிறு சிறு குற்றங்களைச் செய்து இந்த சிறைக்குள் தஞ்சமடைகின்றனர்.

ஏனெனில், இங்கு அவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், இலவச மருத்துவ வசதி மற்றும் சரியான நேரத்திற்கு உணவு கிடைப்பதோடு, சக மனிதர்களின் துணையும் கிடைக்கிறது. கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் மொபைல் போன் போன்ற தனிப்பட்ட பொருட்களுக்குத் தடைகள் இருந்தாலும், தனிமையின் கொடுமையை விட இந்த சிறை வாழ்க்கை தங்களுக்கு நிம்மதியைத் தருவதாக அவர்கள் கருதுகின்றனர்.