“முன்னாள் தொழில் துறை அமைச்சரோட தம்பி ஒருத்தர் ‘ஆக்டிங் அமைச்சரா’ வலம் வந்துகிட்டு ஒவ்வொரு டெண்டருக்கும் கமிஷன் கேட்டு மிரட்டுனதாலதான், 3 லட்சம் கோடி முதலீடும் 2 லட்சம் இளைஞர்களோட வேலையும் தமிழ்நாட்டை விட்டு ஓடிப்போச்சு !”
என்று தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சிவகாசி மேடையில் டேட்டாக்களுடன் பேசியுள்ள ஊழல் புகார் கோட்டை வட்டாரத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தொழில் முதலீடு வாங்குகிறோம் என்று கூறி மக்கள் வரிப்பணத்தில் குடும்பம் குடும்பமாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை எனச் சாடினார்.
திரைக்குப் பின்னால் இருந்து முன்னாள் அமைச்சரின் தம்பி நடத்திய அந்த விசித்திர கமிஷன் அராஜகத்தால் 25 முன்னணி நிறுவனங்கள் அலறியடித்துக்கொண்டு தமிழ்நாடே வேண்டாம் என்று அண்டை மாநிலங்களுக்கு ஓடிப்போனதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, 30 நாள் தவெக ஆட்சியை விமரிசிப்பவர்கள் 2 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்ததற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என ஆவேசமாகச் சவால் விடுத்துள்ளார்.
