“அரசியல் களம்னா ஆயிரம் போட்டிகள் இருக்கும் , ஆனா நம்ம முதலமைச்சர் விஜய் நல்ல உடல்நலத்தோட இன்னும் நீண்ட காலம் மக்கள் பணி செய்யணும்னு நான் மனசார வேண்டிக்கிறேன்!”

என்று  அண்ணாமலை அவர்கள் விடுத்துள்ள நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி தற்பொழுது  அரசியல் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகத் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை உலகப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வரும் நிலையில், அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் முதலமைச்சருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தனது மக்கள் பணிகளைத் தொய்வின்றித் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.