கர்நாடக மாநிலம் பெங்களூரின் கப்பன்பேட் (Cubbonpet) பகுதியில் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு விசித்திரமான மற்றும் கொடூரமான மரணச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள 14-வது கிராஸ் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ஒரு பொதுமகனின் மொபைல் போனைப் பறித்துக் கொண்டு அதிவேகமாக தப்பியோட முயன்றுள்ளனர். இதைப் பார்த்த அங்கிருந்த ஒரு தொழிலாளி, திருடர்களைப் பிடிக்க நினைத்து அவர்கள் சென்ற வண்டியின் மீது ஒரு பெரிய சாக்குப்பையைத் தூக்கி எறிந்துள்ளார்.
இருப்பினும், அந்தத் திருடர்கள் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாகத் தப்பித்து, குறிப்பிட்ட தூரம் வரை ஓடியுள்ளனர். ஆனால், திருடர்களில் ஒருவனான ஜுனைத் என்ற வாலிபர், தப்பியோடிய வேகத்தில் திடீரென அங்கிருந்த நடைபாதையில் (Footpath) சுருண்டு விழுந்துள்ளார். அவனுக்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பயத்தின் காரணமாக அவனுக்கு திடீரென மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
A mobile phone snatching suspect died after collapsing while attempting to flee in Bengaluru's Cubbonpet area on Friday.
According to police, two men riding a scooter allegedly snatched a mobile phone and fled the scene.
During the pursuit, a worker reportedly threw a sack at… pic.twitter.com/xfen6CpObK
— Hate Detector 🔍 (@HateDetectors) June 19, 2026
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாக மாறியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஹலசூரு கேட் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்த ஜுனைத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோட முயன்ற அவனது கூட்டாளியான அற்பாஸ் என்பவனைக் கைது செய்து, மொபைல் பறிப்பு மற்றும் இந்த விசித்திர மரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
