பீகார் மாநிலம் சீதாமர்ஹி (Sitamarhi) ரயில் நிலையத்தில் பார்ப்போரை அதிர்ச்சியில் உறைந்துபோக வைக்கும் மிக விசித்திரமான மற்றும் துணிச்சலான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ரயிலின் டீசல் டேங்கில் இருந்து, திருடன் ஒருவன் எந்தவொரு பயமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக டீசலைத் திருடி, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பையில் ஊற்றும் காட்சி வீடியோவாக வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அந்த நபர் சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூடும் என்ற எந்தவொரு பயமும் இல்லாமல், மிகத் துணிச்சலாக அந்த திருட்டு வேலையைச் செய்துள்ளான். ​இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து, “ரயில்வே துறையில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது” என்று தங்களது ஆக்ரோஷமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்திய ரயில்வேயில் தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற எரிபொருள் திருட்டுகள், ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதால், உடனடியாக சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கடுமையான கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.