அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதலில் சமரசம் செய்யப் போவதாகக் கிளம்பிய பாகிஸ்தானுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான அதிரடி பாணியில் பெரிய ஆப்பு வைத்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் மோதலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு, சுவிட்சர்லாந்தில் நடக்கும் அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்த கையெழுத்து விழாவில் பங்கேற்கப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், ராணுவ தளபதி ஆசிம் முனீரும் தங்களது பெட்டிகளை எல்லாம் பேக் செய்து கிளம்பத் தயாராக இருந்தனர்.
ஆனால், பாகிஸ்தானுக்குக் கொஞ்சமும் தெரியாமல், ஜூன் 17 அன்று பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனையில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் டிஜிட்டல் முறையில் இந்த ரகசிய இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பாகிஸ்தானை நடுக்கடலில் தவிக்கவிட்டுள்ளனர்.
இதனால் சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்த பாகிஸ்தான் பிரதமர், இஸ்லாமாபாத் அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே இந்த ‘வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தை’ பாராட்டி அறிக்கை விட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுத் கொள்கையை டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளதோடு, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அமெரிக்கா நிச்சயம் துணையாக நிற்கும் என்றும், சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு மிக முக்கிய குளோபல் பிளேயர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜி-7 மாநாட்டில் பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பிஎம் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்துப் பாராட்டிய நிலையில், டிரம்பின் இந்த அதிரடி காய்நகர்த்தல் பாகிஸ்தான் முகத்தில் கொடுக்கப்பட்ட பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
