அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான லிஸ் என்பவர் முதன்முறையாக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் மும்பையின் கடுமையான வெயிலுக்கு மத்தியில், மெட்ரோ ரயிலின் உள்ளே இருந்த குளிர்ச்சியான ஏசிவசதி அவருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நியூயார்க் நகர மெட்ரோ ரயில்களுடன் ஒப்பிடுகையில், மும்பை மெட்ரோவின் அசாத்தியமான தூய்மை அவரைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

“>

இதனால் “மும்பை மெட்ரோ நியூயார்க் மெட்ரோவை விட மிகவும் தூய்மையாக இருக்கிறது; அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த மெட்ரோ பயணத்தில் பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகள் இருந்ததை அவர் ஆச்சரியத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தான் இதுவரை பயணித்த மற்ற நாடுகளில் இது போன்ற வசதியைக் கண்டதில்லை என்றும், இந்தியாவின் இந்த முயற்சி மிகவும் சிறப்பானது என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்திய நெட்டிசன்கள் பலரும் பெருமிதத்துடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.