பெங்களூருவில் வசிக்கும் தனது காதலியின் ஒரு மாத கால செலவுகளைப் பட்டியலிட்டு இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில், காதலி காபி குடிக்க மட்டுமே ₹6,500 செலவு செய்துள்ளதாகவும், ஆடைகளுக்காக ₹12,000 செலவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர வாடகை, சருமப் பராமரிப்பு மற்றும் இதர ஷாப்பிங் என ஒட்டுமொத்த செலவுகளின் பட்டியலையும் பார்த்த பிறகு, தனக்குக் கணக்கே மறந்து போய்விட்டது என்று அந்த இளைஞர் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த விலையுயர்ந்த செலவுப் பட்டியலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சிலர் பெங்களூரு போன்ற பெருநகரங்களின் தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் இந்த அளவுக்குச் செலவு செய்ய எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டு விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர், “காதலி வைத்திருப்பது ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலான சப்ஸ்கிரிப்ஷன் பிளான் போல இருக்கிறது” என்றும், “இங்கு ஸாரா பிராண்டை விட இந்திரா நகரில் வாழ்வது தான் அதிக செலவு” என்றும் கலகலப்பாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.