இன்றைய சமூக ஊடக உலகில் குறுகிய வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் (Reels) மிகப்பெரிய ட்ரெண்டாக மாறிவிட்ட சூழலில், லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அள்ள வேண்டும் என்ற ரீல்ஸ் மோகத்தில் இளம்பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து குதித்து ஸ்டண்ட் செய்ய முயன்ற போது பேலன்ஸ் மாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான அதிரடி வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய புயலையும் பரப்பரப்பையும் கிளப்பியுள்ளது.
இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வரும் அந்த அதிர்ச்சி வீடியோவில், இளம்பெண் ஒருவர் கேமரா முன்னிலையில் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கொண்டு, அங்கிருந்து கீழே குதித்து ஆபத்தான ஸ்டண்ட் ஒன்றைச் செய்ய முயன்றுள்ளார்.
अब तो कुछ महिलाएं भी Reel बनाने के लिए जोख़िम भरा स्टंट करने लगी हैं। देखिए इस मैडम को छत से गिर गई और इसकी Reel बन गई। pic.twitter.com/SzgUgdSKkD
— Irfan Ali (@iiamirfanali) June 17, 2026
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது காலடிகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதால், திடீரென கட்டுப்பாட்டை இழந்து மாடியின் விளிம்பிலிருந்து நிலைதடுமாறி மிகக் கொடூரமாகக் கீழே விழுந்துள்ளார்; அந்த வீடியோவும் அத்தோடு திடீரென முடிவடைந்து விடுகிறது. அந்தப் பெண்ணுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதா அல்லது அவரது தற்போதைய நிலை என்ன என்பது குறித்த கவலைகளுடன் இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வெறும் சமூக ஊடகப் புகழுக்காகவும், இணையவாசிகளை ஈர்ப்பதற்காகவும் எந்தவொரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையும் இல்லாமல், பிஸியான சாலைகள் மற்றும் கட்டிட உச்சி மாடிகளில் இது போன்ற ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபடுவது தேவையற்றது என்றும், பொறுப்பான முறையில் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும் கவலைகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
சோசியல் மீடியா ஏரியாக்களில் லைக்ஸ் வாங்குவதற்காகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த விபரீத ரீல்ஸ் கலாச்சாரம் தற்பொழுது இணையத்தில் “ஒரு ரீல்ஸுக்காக இப்படியா உயிரை விடுற அளவுக்கு ரிஸ்க் எடுப்பாங்க!” என்று நெட்டிசன்கள் மத்தியில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
