பாஜக கட்சியின் பிரமுகர் விஜயதாரணிக்கு கட்சியில் இன்று வரை பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால் அவர் அந்த கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த விஜயதரணி தொடர்ந்து மூன்று முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். இவர் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போது தனக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் செல்வ பெருந்தகைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு அவர் காய் நகர்த்திய நிலையில் அந்த பதவியும் செல்வபெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று அவர் விரும்பிய நிலையில் காங்கிரஸ் கட்சி அதற்கு மறுத்ததால் பின்னர் பாஜகவில் இணைந்தார். அவர் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த பிறகு அவருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கவில்லை கட்சியிலும் பெரிய பொறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த அவர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் வைத்து அந்த கட்சியில் இணைய  இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.