இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்தினருடன் இணைந்து பறக்கும் விமானத்தில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய அரிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. சுமார் 32,000 அடி உயரத்தில் உள்ள ஒரு தனியார் விமானத்தில் இந்த சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளது.

மேலும் தனது குடும்பத்துடன் பயணம் செய்த சச்சின், “உயரம் எதுவாக இருந்தாலும், நம்முடைய குணம் மற்றும் அணுகுமுறை மாறக்கூடாது” என்ற அழகான வாசகத்துடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“>

இதனால் விமானத்தின் உள்ளே நடந்த இந்த ஜாலி ஆட்டத்தில், சச்சினின் மருமகள் சானியா சண்டோக் பந்து வீச, சச்சின் பேட்டிங் செய்துள்ளார். சானியா வீசிய பந்தை சச்சின் அடிக்க முயல, அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் சாமர்த்தியமாக அந்த கேட்ச்சை பிடித்து தந்தையை அவுட் ஆக்கினார்.

இந்நிலையில் விளையாட்டின் போது சாரா சற்றே ஏமாற்ற முயன்றதை சச்சின் உடனடியாக கலகலப்புடன் கண்டுபிடித்தார். விமானத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக லேசான பந்தைப் பயன்படுத்தி அவர்கள் விளையாடிய இந்த க்யூட்டான குடும்ப வீடியோவை, லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.