“நீங்க வேண்டாம்னு சொன்னா நான் அரசியலுக்கு வரலப்பா!” என்று ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் நடிகர் ராகவா லாரன்ஸ் பகிரங்கமாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை தனது அரசியல் வருகை குறித்து 18 நிமிட பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்ட லாரன்ஸ், தனது அரசியல் பயணத்தைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர், “இந்த காணொளியைப் பார்த்த பிறகு உங்களது ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கமெண்ட் செய்யுங்கள்; நீங்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னால் நான் நிச்சயம் அரசியலில் நுழைய மாட்டேன், எனது அறக்கட்டளை மூலமாக சமூகத்திற்கான தன்னலமற்ற சேவைகளை எப்போதும் போலத் தொடர்வேன்” என்று நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். அதே நேரத்தில், மக்கள் ‘ஆம்’ என்று பச்சைக்கொடி காட்டினால் தான் அரசியலில் நுழைய முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், யாருடன் இணைந்து எப்போது இந்த அரசியல் பயணத்தைத் தொடங்கப் போகிறேன் என்ற ரகசியத்தை மக்கள் கொடுக்கும் தீர்ப்புக்குப் பின் ஆசீர்வாதங்களுடன் அறிவிப்பேன் என்றும் ஓப்பனாகப் பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டு அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருந்தேன். ஆனால் அவர் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியவுடன், நான் மிகவும் வருத்தப்பட்டு விட்டேன் என்றார். மேலும் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் அவருடன் இணைய வேண்டும் அவர் ஆதரவாக நிற்க வேண்டும் என்று விரும்பினேன்.

ஆனால் என்னுடைய தாயார் அரசியல் ஒரு சாக்கடை நீ அரசியலுக்கு போகாத கண்ணா என்று கூறி என்னை தடுத்துவிட்டார். பணம் கொடுத்தால்தான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்று என் தாய் கூறிய நிலையில் விஜய் ஜெயித்த பிறகு என்னுடைய தாயிடம் நீ சொன்னது தப்பாக போய்விட்டது விஜய் ஜெயித்துவிட்டார் என்றேன். உடனே அதற்கு என்னுடைய அம்மா அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு. நீயும் போ கண்ணா என்று கூறினார்கள் என்றார். மேலும் இதன் காரணமாக தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

 

“>