“திமுகவில் உழைப்பவர்களுக்கு இனி மதிப்பில்லை!” என்ற முழக்கத்துடன், புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் மிக முக்கிய முகமாக வலம் வந்த பிரபல  வழக்கறிஞர் டி.வளர்மதி, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பிறகும் கூட, முக்கிய கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சி மாறும் அதிரடி சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், புதுக்கோட்டை திமுகவின் தூணாகப் பார்க்கப்பட்ட வழக்கறிஞர் வளர்மதி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து தன்னை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

திமுக தலைமை மீது கடந்த சில மாதங்களாகவே ஏற்பட்ட கடுமையான அதிருப்தி மற்றும் உள்ளூர் உள்கட்சி பூசல் காரணமாகவே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதுக்கோட்டையில் தங்களது கோட்டையை பலப்படுத்த வளர்மதிக்கு முக்கியப் பதவி கொடுக்க EPS திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் புதுக்கோட்டை திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“>