மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எவ்வித அரசு பந்தாவும் இன்றி சாமானிய மக்களைப் போல நடந்து கொண்ட விதம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அமைச்சர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்கு வரும்போது சிறப்பு வழிகள் மற்றும் தனிப் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக அமைச்சர் ரமேஷ், பொதுமக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் பொறுமையாகக் காத்திருந்து கோவிலுக்குள் சென்றுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது காலணி மற்றும் கைபேசியை ஒப்படைத்து விட்டு கோவிலுக்குள் சென்ற அமைச்சர் ரமேஷ் #Madurai #MinisterRamesh #MeenatchiAmmanTemple #HRCE #Newstamil24x7 pic.twitter.com/vJQxjoZKdH
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 11, 2026
கோவில் நுழைவாயிலில் உள்ள பொது கவுண்ட்டருக்குச் சென்ற அமைச்சர், தனது காலணிகளையும் கைபேசியையும் (மொபைல் போன்) தானே நேரில் ஒப்படைத்து அதற்கான டோக்கனைப் பெற்றுக் கொண்டார். விஐபி கலாச்சாரத்தைத் தவிர்த்து, ஒரு சாதாரண பக்தனாக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அவர் சாமி தரிசனம் செய்யச் சென்ற இந்தத் தகவல் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறைக்கு பொதுமக்களிடையே பெரும் பாராட்டும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
