திமுக மூத்த அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏ.வ.வேலு ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ரகசியமாகத் தொடர்பு கொண்டது அதிமுகவில் உள்ள பிற எம்.எல்.ஏக்களுக்கோ அல்லது முன்னாள் அமைச்சர்களுக்கோ தெரியாது என்று சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாஷ்யம் கட்டுமான நிறுவன உரிமையாளர் அபினேஷின் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி, சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அந்த ரகசிய சந்திப்பின் போது, சபரீசனுடைய அலைபேசி வழியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக லைனில் வந்து, “எங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம், உங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டோம்; எங்கள் மீது வழக்குகள் போடாமல், ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும், நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்” என டீல் பேசியதாக சவுக்கு சங்கர் விவரித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் கொடுத்த இந்த ரகசிய ஆதரவு உறுதி மொழியால் எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் முதலமைச்சராகும் ஆசை வந்துவிட்டதாகவும், அதன் பின்னரே விசிக-வுக்கு 2 இடங்கள் மற்றும் ஐயுஎம்எல், ஆமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டு, திமுகவின் வெளி ஆதரவோடு ஆட்சியமைக்க இபிஎஸ் சம்மதித்தார் என்றும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
இந்த மெகா மாஸ்டர் பிளானின் காரணமாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனடியாகப் பாண்டிச்சேரி ரிசார்ட்டுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், அதன் பிறகே “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி வரும்” என எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்களிடம் கெத்தாகக் கூறினார் என்றும் சவுக்கு சங்கர் உடைத்துள்ள இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
