கிரிக்கெட் உலகில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷியைத் தொடர்ந்து, தற்போது அவரது தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷியும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது அண்ணனைப் போலவே ஆசிர்வாத்தும் களத்தில் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆசிர்வாத்தின் எதிர்காலம் மற்றும் அவரது விளையாட்டுத் திறன் குறித்துப் பேசிய வைபவ்வின் தந்தையும், பயிற்சியாளருமான சஞ்சீவ் சூர்யவன்ஷி, ஆசிர்வாத்திடம் சிறந்த திறமை இருப்பதாகவும், அவர் கடுமையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். வைபவ்வின் திறமை தனித்துவமானது என்றும், அவரை யாருடனும் ஒப்பிட முடியாது என்றும் சஞ்சீவ் சூர்யவன்ஷி திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

தற்போது தனது முழு கவனமும் வைபவ்வின் கிரிக்கெட் பயணத்திலேயே இருப்பதாகக் கூறிய அவர், ஆசிர்வாத்திற்கு சரியான பயிற்சியும் நேரமும் கிடைத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரும் கிரிக்கெட் களத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை நிச்சயம் உருவாக்கிக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.