ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தனது விக்கெட்டை எளிதில் பறிகொடுத்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வீசிய வலையில் சிக்கிய பண்ட், தொடக்கத்தில் இரண்டு முறை அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

எனினும், தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாத அவர், மூன்றாவது முறை அதே போன்றதொரு தவறைச் செய்து ஆட்டமிழந்தார். இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளைச் செய்து விக்கெட்டை இழப்பது, ரிஷப் பண்ட்டின் பேட்டிங் அணுகுமுறை குறித்து விவாதங்களை உருவாக்கியுள்ளது.

“>

இதனால் முக்கியமான தருணங்களில் நிதானம் தேவைப்படும் நிலையில், அவர் மீண்டும் மீண்டும் ‘மண்ணைக் கவ்வியது’ இந்திய அணியின் ரன் விகிதத்தைக் குறைத்தது. ஒரு சிறந்த வீரராக, தனது பிழைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.