மும்பையில் பிளின்கிட் நிறுவன விநியோக ஊழியர் ஒருவர், பட்டப்பகலில் நடுரோட்டில் இருந்த ஒரு நீளமான பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்து, தனது டெலிவரி பைக்குள் போடும் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
‘@gharkekalesh’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மஞ்சள் நிற பிளின்கிட் டி-ஷர்ட் அணிந்திருக்கும் அந்த இளைஞர், எவ்வித பயமும் இன்றி பாம்பின் வாலைப் பிடித்துத் தூக்கி, நேராகத் தனது டெலிவரி பைக்குள் வைப்பது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான 24 மணி நேரத்திற்குள் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த விசித்திரமான வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், “மும்பை நம்மை எப்போதும் ஏமாற்றுவதில்லை, பிளின்கிட் நிறுவனம் இப்போது அதிகாரப்பூர்வமாக ‘பாம்பு டெலிவரி’ செய்ய ஆரம்பித்துவிட்டது போல, எனக்கும் ஒரு பைதான் மலைப்பாம்பு ஆர்டர் செய்யலாமா என்று யோசிக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
A snake suddenly fell from the bag of a Delivery guy on a busy street in Mumbai in broad daylight pic.twitter.com/deVTXcoMxF
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 6, 2026
“>
மற்றொரு பயனர், “நிறுவனம் நஷ்டத்தில் ஓடுகிறது போல, அதான் நஷ்டத்தை ஈடுகட்ட இவர்கள் பகுதிநேரமாக இப்படி கூடுதல் வேலை செய்கிறார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
