புனே அருகே உள்ள லோனி கால்போர் பகுதியில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கணவர் ஒருவரே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு கனமான கல்லை எடுத்து மனைவியின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான செயலைச் செய்த பிறகு, அந்த நபர் தலைமறைவாகாமல், தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தான் மனைவியை தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இத்தகவல் கிடைத்தவுடன் உறவினர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட லோனி கால்போர் காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலையை முயற்சி செய்த அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
