விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சூழலில், வரும் 2050-ஆம் ஆண்டில் மனித வாழ்க்கையும் இந்த உலகமும் எப்படி அடியோடு மாறப்போகிறது என்பது குறித்த அதிர வைக்கும் சில கணிப்புகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வியப்பைக் கிளப்பியுள்ளன.
எதிர்காலத்தில் செயற்கைக் கருவறை (Artificial Womb) தொழில்நுட்பம் மூலம், தாயின் உடலுக்கு வெளியேயான ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் கருவை வளர்க்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருவதால், “பெற்றோரே இல்லாமல் குழந்தைகள் பிறக்கும்” நிலை வரலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், ஸ்டெம் செல் மற்றும் மரபணு சிகிச்சை மூலம் உடலின் சேதமடைந்த உறுப்புகளைப் புதுப்பிப்பது, விழுந்த பற்களை மீண்டும் முளைக்க வைப்பது, மற்றும் பக்கவாதம், குருட்டுத்தன்மை, சர்க்கரை நோய் போன்ற நோய்களை முற்றிலும் குணப்படுத்தும் புரட்சிகரமான மருத்துவ வசதிகள் வரவுள்ளன.
மனிதனின் முதுமையைத் தடுத்து செல்களைப் புதுப்பிப்பதன் மூலம், மனித ஆயுளை 150 முதல் 200 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உச்சமாக, இறந்துபோன தங்களின் முன்னோர்களின் டிஜிட்டல் தரவுகளை வைத்து அவர்களின் ஏஐ மாடல்களுடன் நேரில் பேசுவது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
ரோபோக்கள், தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் சிட்டிகள் என மனிதர்களின் பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யப்போகும் இந்த 2050-இன் எதிர்கால உலகம், இன்று நாம் திரைப்படங்களில் பார்க்கும் கற்பனைகளையும் மிஞ்சும் வகையில் அமையப்போவது மட்டும் உறுதி.
