இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் உணவுப் பொருட்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வரும் வேளையில், சக பயணியை ரயில் வண்டர் ஒருவர் மிரட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் பயணி ஒருவர், தன்னிடம் விற்கப்பட்ட சாப்பாட்டின் விலை குறித்து அங்கிருந்த ஊழியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்; அதாவது, முறைப்படி 80 ரூபாய் மட்டுமே விற்கப்பட வேண்டிய உணவை, எந்தவித பில்லும் இல்லாமல் 130 ரூபாய்க்கு விற்க முயன்றதை அந்தப் பயணி தட்டிக்கேட்டுள்ளார்.
Passenger Questioned ₹80 Meal Being Sold for ₹130, Vendor Threatened Him Saying. “Tumhe Train Se Neeche Fenkne Mein Time Nahi Lagega” pic.twitter.com/2XOQD2mBQ1
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 3, 2026
இதனால் ஆத்திரமடைந்த அந்த வண்டர், நியாயமாகக் கேள்வி கேட்ட பயணியைப் பார்த்து, “உன்னை ரயிலில் இருந்து கீழே தூக்கி எறிய எனக்கு அதிக நேரம் ஆகாது” என்று சக பயணிகள் முன்னிலையிலேயே மிகக் கொடூரமாக மிரட்டல் விடுத்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் இந்த வாக்குவாதத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து எக்ஸ் (X) தளத்தில் பகிர, அது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து அதிரடியாக வைரலாகி வருகிறது.
தண்ணீர்ப் பாட்டில் முதல் சாப்பாடு வரை ரயில்களில் நடக்கும் இந்த பகல் கொள்ளையைச் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், பயணியை மரண மிரட்டல் விடுத்த அந்த ஊழியரின் உரிமத்தை ரத்து செய்து, இந்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
