உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான நெய் கலப்பட ஊழல் விவகாரத்தில், தற்போது நாடு முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் அதிரடி சோதனைகளும், சட்ட நடவடிக்கைகளும் பாய்ந்து வருகின்றன.

இந்த கலப்பட ஊழல் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள், நாடு முழுவதும் மொத்தம் பதினைந்து இடங்களில் தங்களது அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக 8 முக்கிய இடங்களில் அதிகாரிகள் நடத்திய அதிரடி வேட்டையில், கணக்கில் வராத 60 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஊழலோடு தொடர்புடைய சுமார் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல், இந்த நெய் கலப்பட முறைகேட்டில் சம்பாதித்த பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை, போலி நிறுவனங்கள் (Shell Companies) மூலமாகப் கைமாற்றிப் பதுக்கியுள்ள திடுக்கிடும் உண்மைகளும் இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது, ஒட்டுமொத்தப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.