மத்திய அரசு 2025-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற தேசிய பஞ்சாயத்து விருதுகளைத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது பட்டியலில், தமிழகத்தின் கோவை மாவட்டம் தேசிய அளவில் 3-ஆவது பரிசைத் தட்டிச் சென்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த தேசிய விருதுகளுக்கான போட்டியில் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்திற்கு முதல் பரிசும், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திற்கு 2-ஆவது பரிசும் கிடைத்துள்ளது.
மேலும், சிறந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிறந்த கிராம ஊராட்சி போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகளும் இதனுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி நிர்வாகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தேசிய அளவில் முத்திரை பதித்துள்ள கோவை மாவட்டத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.
