இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அலுவலகத்திற்கும், சொந்த வேலைகளுக்கும் சீக்கிரம் செல்ல பலரும் பைக் டாக்ஸிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்கள் புக் செய்த பைக் உங்களை ஏற்றாமலேயே கிளம்பிச் சென்றால் எப்படி இருக்கும்? டெல்லியில் ‘பிரதிமா’ என்ற இளம்பெண்ணுக்கு அப்படியொரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அவர் தனது அலுவலகத்திற்குச் செல்ல உபெர் பைக் ஒன்றை புக் செய்துள்ளார். பைக் ஓட்டுநரும் பிரதிமா நின்ற இடத்திற்கு வந்துள்ளார். ஆனால், அவர் தீவிரமாக யாருடனோ மொபைல் போனில் பேசிக்கொண்டே வந்துள்ளார். வந்த வேகத்தில் பிரதிமாவிடம் ஹெல்மெட்டைக் கொடுத்துவிட்டு, அவர் பைக்கில் ஏறுவதற்கு முன்பாகவே வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு பறந்துவிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pratima (시아) (@pratimachoudhary97)

கதையின் உச்சக்கட்ட திருப்பமாக, அந்த டிரைவர் தனது போன் உலகத்திலேயே மூழ்கி, புக் செய்யப்பட்ட அந்தப் பகுதிக்கு  நேராகச் சென்று சேர்ந்துவிட்டார். அங்கு சென்று பின்னால் திரும்பிப் பார்த்தபோது தான் வண்டியில் பயணி இல்லை என்ற அதிர்ச்சி உண்மை அவருக்குத் தெரிந்தது. உடனே பதறியடித்துக்கொண்டு பிரதிமாவை போனில் அழைத்த அந்த டிரைவர், “மேடம், நீங்க எங்க இருக்கீங்க? ஏன் வரல?” என்று மழலைத் தனமாகக் கேட்டுள்ளார். தான் வழியிலேயே தவறி விழுந்துவிட்டேனோ என்று டிரைவர் நினைத்ததாக பிரதிமா இன்ஸ்டாகிராமில் சிரித்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். “வண்டி என்னை விட்டுட்டுப் போயிருச்சு, இப்போ இந்த ஹெல்மெட்ட வச்சு நான் என்ன பண்ணட்டும்?” என்று அவர் போட்ட பதிவு, சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கானோரைச் சிரிக்க வைத்து, மரண ட்ரெண்டாகி வருகிறது.