பாகிஸ்தான் நாட்டின் லாகூர் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, பெற்ற 8 மகள்கள் அழுது கதறி, காலில் விழுந்து கெஞ்சிய நிலையிலும், அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் தாய் ஒருவர் தனது இரண்டாவது கணவருடன் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், நெட்டிசன்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும் குவித்து வருகிறது.
ஷப்னம் பீபி என்ற அந்த பெண், குலாம் உசேன் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட நிலையில், முந்தைய குடும்பத்தினர் தன்னை சட்டவிரோதமாகக் காவலில் வைத்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தார். விசாரணையின் போது, தான் தனது விருப்பப்படிதான் குலாம் உசேனைத் திருமணம் செய்ததாகவும், அவருடன் வாழ விரும்புவதாகவும் ஷப்னம் வாக்குமூலம் அளித்தார்.
இதனை ஏற்ற நீதிமன்றம், அவர்கள் இருவரும் இணைந்து வாழ அனுமதியளித்து உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. ஷப்னத்தின் 8 பெண் மகள்களும் ஓடிவந்து, தாயின் காலில் விழுந்து தங்களை விட்டுப் போக வேண்டாம் என அழுது அடம் பிடித்துள்ளனர்.
बाप गुज़र गया तो मां ने आठों जवान बेटियों न सिर्फ पहचानने से इंकार किया बल्कि दूसरी शादी कर ली
ये नजर पाकिस्तानी कोर्ट का बताया जा रहा है जहां पर बेटियों ने मां को अपने घर वापस लाने के लिए पिटिशन दायर की थी पर जज ने मां को अपनी जिंदगी गुजारने का हक़ का हवाला देते हुए शादी करने… pic.twitter.com/J2cRy1nUzl
— Anis Ahmad (@Ansari5k) June 2, 2026
ஒரு கட்டத்தில் அந்த தாய், “நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” எனத் தனது சொந்தப் பிள்ளைகளையே அடையாளம் தெரியாது எனக் கூறி உதறிவிட்டு, இரண்டாவது கணவருடன் காரில் ஏறிச் சென்றுள்ளார். பாசப் போராட்டத்திற்குப் பின்னால் இருக்கும் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பெத்த பிள்ளைகளை இப்படி நடுத்தெருவில் தவிக்கவிட்டுச் செல்ல எப்படி மனசு வந்தது?” என நெட்டிசன்கள் அந்த தாயை அக்குвеறாக ஆணிவேறாக விமரிசித்து வருகின்றனர்.
