“எதிரெதிர் அரசியலில் இருக்கும் திமுகவும், அதிமுகவும் திடீரென சந்தர்ப்பவாத நிலை எடுத்து, இருவரும் இணைந்து ஆட்சியமைப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தற்போதைய தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணிகள் குறித்துப் பல அதிரடி உண்மைகளை உடைத்துள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் குறித்த கேள்விகளுக்கு அவர் ஓப்பனாகப் பதிலளித்துள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

​அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், “விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போயிருந்தால், அடுத்த வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது; அப்படியான வாய்ப்பை நாம் பயன்படுத்தலாம் என்று வேண்டுமானால் யோசித்திருக்கலாம். இதைத்தான் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் தெரிவித்தார்” என்று ஒரு பெரிய அரசியல் ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரடி மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த பேட்டி, தற்போதைய அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.