“அதிமுக தலைவர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை மதித்து போற்ற வேண்டும்” என்று முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு மதுரையில் மிக ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் எடுத்த விபரீத முடிவுக்கு, அக்கட்சிக்குள் நிலவி வரும் உள்கட்சிப் பிரச்சினைகளே காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செல்லூர் ராஜுவின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவிற்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்படக் காரணமாக இருந்தவர்கள், தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும்” என தலைமைக்கு அதிரடி சிக்னல் கொடுத்துள்ளார். உள்கட்சி மோதல்களால் தொண்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதைச் சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ள இந்த விவகாரம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூடாரத்திற்குள் புதிய விவாதத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
