தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனக்கு வாக்களித்து அரியணையில் அமரவைத்த திருச்சி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார்!
திருச்சி கிழக்கு தொகுதியில் திறந்த பிரச்சார வாகனத்தில் நின்றபடி, வழிநெடுகிலும் திரண்டு நின்ற லட்சக்கணக்கான பொதுமக்களை நோக்கிக் கையசைத்தும், கும்பிட்டும் அவர் நன்றி தெரிவித்தார்.
புதிய முதல்வரை வரவேற்பதற்காக மாவட்ட உயரதிகாரிகளும், தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் எல்லையில் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியது; முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு வாகனத்தைப் பின்தொடர்ந்து ஓடிவந்த கமாண்டோ பாதுகாவலர் ஒருவர், திடீரென ஓடும் வாகனத்தில் ஏற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் சில நொடிகள் பதற்றம் ஏற்பட்டது.
முதல்வர் வாகனத்தை பின் தொடர்ந்து ஓடி வந்த பாதுகாவலர்… வாகனத்தில் ஏறும்போது தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு#CMVijay | #Trichy | #TVK | #Vijay | #TrichyEast | #Vijay | #Roadshow | #VijayRoadshow pic.twitter.com/BSYGa0Gvfn
— PttvOnlinenews (@PttvNewsX) June 1, 2026
“>
