தஞ்சை அருகே உயிரை மாய்த்துக் கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் மறைவு, ஒட்டுமொத்தக் கட்சியினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மகேந்திரனின் உடலைப் பார்த்து நா தழுதழுக்க, கண்கள் குளமாகப் பேசிய இபிஎஸ், “மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம்.. இனிமேல் இப்படிப்பட்ட விபரீத முடிவை யாரும் கையில் எடுக்க வேண்டாம்” என்று தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், மகேந்திரனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், திக்கற்று நிற்கும் அவரது பிஞ்சுக் குழந்தையின் முழு படிப்புச் செலவையும் அதிமுகவே ஏற்கும் என்றும், இந்தத் துயரமான நேரத்தில் குடும்பத்திற்கு அதிமுக என்றும் அரணாகத் துணை நிற்கும் என்றும் அதிரடியாக உறுதியளித்துள்ளார்!
