“இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கு போலீசாராலும் பாதுகாப்பு இல்லை, அதேநேரம் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் ஒருவரே சிறுவன் ஒருவனுக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், வேளச்சேரியில் நடைபயிற்சி சென்ற மூத்த பெண்மணிக்கு நேர்ந்த கொடூரமும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு…
— Udhay (@Udhaystalin) May 28, 2026
“>
மேலும், கும்பகோணத்தில் ஆளுங்கட்சியினர் தாக்கியதில் போலீஸ்காரர் ஒருவரின் கையே உடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறையின் இந்த அவலநிலைக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எம்.எல்.ஏ-க்களைப் பிடிக்கும் வேலையை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் என்றும், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வைக்க அவர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் பெண்மணிக்கு உரிய நீதி கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
