ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், வெறும் 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அசாத்திய பேட்டிங் திறமையால் உலக கிரிக்கெட்டையே அதிர வைத்துள்ளார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான பும்ரா, ஹசல்வுட், கம்மின்ஸ் போன்ற டாப் பவுலர்களின் பந்துகளையெல்லாம் அசால்ட்டாக சிக்சருக்கு பறக்கவிட்டு ஜாம்பவான்களை மிரள வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக நேற்றைய ஒரே போட்டியில் மட்டும் 12 சிக்சர்களை விளாசி தள்ளிய அவர், இந்த ஒரே ஐபிஎல் சீசனில் 60 சிக்சர்களை அடித்து, சிக்ஸ் ஹிட்டிங் லெஜண்ட் கிறிஸ் கெயிலின் 59 சிக்ஸர்கள் என்ற வரலாற்று சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
What a phenomenal player Vaibhav is. Great entertainment young man! New Six machine @IPL pic.twitter.com/ofElAousF7
— Chris Gayle (@henrygayle) May 27, 2026
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்தை நேரில் பார்த்து வியந்த முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில், “வைபவ் எப்பேர்ப்பட்ட ஒரு அற்புதமான வீரர், மிகச் சிறந்த பொழுதுபோக்கு இளைஞர்; ஐபிஎல்லின் புதிய ‘சிக்ஸ் ஹிட்டிங் மெஷின்’ இவர்தான்” என்று மனதாரப் பாராட்டியுள்ளார். கெயில் மட்டுமன்றி சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல் என உலகத்தரம் வாய்ந்த பல சாம்பியன் வீரர்களும் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையைப் பார்த்து புகழ்ந்து தள்ளி வருவதால், இந்த செய்தி தற்போது சோசியல் மீடியா மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
