டெல்லியில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதனையும் அவர் சந்தித்துப் பேசினார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் நடத்திய சந்திப்பின் தொடர்ச்சியா கவே இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது;

இதில் தமிழகத்தின் வளர்ச்சி, நிதி நிலைமை மற்றும் மாநிலத்திற்கான புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.