ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் கியூட் வீடியோ ஒன்று எக்ஸ் (X) தளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. மைதானத்தில் சிக்ஸர் மழையாகப் பொழிந்து அசுர ஆட்டம் ஆடிய வைபவ், நிஜ வாழ்க்கையில் இன்னும் ஒரு சாதாரண குறும்புக்கார சிறுவன் தான் என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.
No more proof needed that Vaibhav Suryavanshi is still just a kid 😂
Before the RR vs SRH clash, he was vibing in full Bhojpuri style with a towel on a Rajasthan song 🤣🎶 pic.twitter.com/yaRBEShJb6
— OldMonkOfCricket (@OldMonkOfCric) May 27, 2026
ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்த வாழ்வா சாவா போட்டிக்கு முன்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பாடல் ஒன்றுக்கு வைபவ் சூர்யவன்ஷி முழு போஜ்புரி ஸ்டைலில், கழுத்தில் துண்டைக் கட்டிக்கொண்டு செம்மையாக வைப் செய்து நடனமாடியுள்ளார். மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களையே தனது பேட்டிங் டெக்னிக்கால் வியக்க வைத்த இந்த 15 வயது சிறுவன், போட்டிக்கு முன்னாடி எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் இப்படி ஜாலியாக லூட்டி அடித்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் “அவன் இன்னும் சின்ன பையன் தான்ப்பா” என்று நெகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும் கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
