ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில், பூஜா ஜோஷி என்ற இளம்பெண் செக்ஸ் பொம்மை ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பொருளை டெலிவரி செய்ய வந்த நபர் பூஜாவை ஒரு மாதிரியாக உற்றுப் பார்த்துள்ளார். இதனால் பயந்துபோன பூஜா பார்சலை வாங்கிக்கொண்டு கதவை சாத்தியுள்ளார்.
உள்ளே வந்து பார்த்தபோது தான் பார்சல் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்துள்ளார்.
உடனே அந்த டெலிவரி நபர் பூஜாவிற்கு போன் செய்து, “இந்த மாதிரி பொருட்களை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? அதெல்லாம் வேண்டாம், என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஒரே மஜாவாக இருக்கும்” என்று கூறி பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உயரதிகாரிகளிடம் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டியதும் அந்த நபர் பயந்துபோய் மன்னிப்பு கேட்டுவிட்டு போனை வைத்துள்ளார். எனினும், தனக்கு ஏற்பட்ட அச்சமும் அத்துமீறலும் ஒரு மன்னிப்பால் மறைந்துவிடாது என பூஜா பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் பூஜாவிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியதோடு, அந்த டெலிவரி நபரை வேலையை விட்டும் நீக்கியுள்ளது.
இச்சம்பவத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ஒரு பெண் பாலியல் சார்ந்த பொருளை ஆர்டர் செய்கிறார் என்பதற்காக அவரைத் துன்புறுத்த யாருக்கும் உரிமை இல்லை என அந்த நபருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
