இந்திய சர்வதேச எல்லைகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு உத்தரப் பிரதேச அமைச்சர் அனில் ராஜ்பர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா-நேபாள எல்லையில் அமைந்துள்ள, தனது பொறுப்புக்கு உட்பட்ட சித்தார்த் நகர் மாவட்டத்தில் சமீபத்தில் பெரிய அளவில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எல்லையோர பகுதிகளில் ஏதோ ஒரு திட்டமிட்ட சதி பின்னணியுடன் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருவது போன்ற தோற்றம் உள்ளதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இந்தியா-பங்களாதேஷ் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள் மிகவும் உணர்திறன் (Sensitive) வாய்ந்தவை என்பதால், நாட்டின் பாதுகாப்பைக் கருதி மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று அவர் பாராட்டியுள்ளார். அமித் ஷாவின் தலைமையின் கீழ் நடத்தப்படும் இந்த அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சாரம் முற்றிலும் தேச நலனுக்கானது என்றும், எல்லையோர அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே சரியான வழி என்றும் அமைச்சர் அனில் ராஜ்பர் தனது பேட்டியில் அனல் பறக்கப் பேசியுள்ளார்.
