பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் பணியாற்ற மறுத்து மேற்கு இந்திய சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு எடுத்துள்ள கடுமையான முடிவுக்கு, திரைப்பட இயக்குநர் ஆதித்யா கிருபாலனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது ரன்வீர் சிங்குக்கும் ‘எக்ஸெல்’ தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஈகோ மோதல் மற்றும் சர்ச்சை நிலவி வரும் சூழலில், சங்கம் எடுத்துள்ள இந்த முடிவு முற்றிலும் தவறானது என்று அவர் விமர்சித்துள்ளார்.
பாலிவுட் சினிமா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு பற்றாக்குறையையும், பொருளாதார மந்தநிலையையும் சந்தித்து வரும் வேளையில், இப்படி ஒரு பெரிய படத்தை முடக்குவது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய மனிதர்களின் அகந்தை மற்றும் ஈகோ மோதல்களால் திரையுலகில் உள்ள பெரிய பெயர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ எந்தப் பணப் பற்றாக்குறையும், பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று ஆதித்யா கிருபாலனி சாடியுள்ளார்.
View this post on Instagram
“>
ஆனால், இயக்குனர் ஜெய் மேத்தாவின் வரவிருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமான ‘பிரளய்’ போன்ற பெரிய திட்டங்கள் முடங்கினால், படப்பிடிப்புத் தளங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களுமே வாழ்வாதாரத்தை இழந்து நசுக்கப்படுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, சங்கம் தனது கடுமையான நிலைப்பாட்டைத் தளர்த்தி, ஏழைத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
