நடப்பு 19-வது ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டி மே 31-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ஏற்கனவே முதலாவது குவாலிபையர் போட்டியில் மாஸாக வெற்றி பெற்று பைனலுக்குள் கெத்தாக நுழைந்துவிட்டது.
பெங்களூரு அணியுடன் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டப் போகும் அந்த இரண்டாவது அணி எதுவாக இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எகிறியுள்ள நிலையில், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த டாப்-6 வீரர்களின் சுவாரசியப் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான நம்ம ‘தல’ எம்.எஸ். தோனி, சிஎஸ்கே மற்றும் புனே அணிகளுக்காக ஒட்டுமொத்தமாக 11 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ‘சின்னத் தலை’ சுரேஷ் ரெய்னா மற்றும் சென்னை – மும்பை என இரு பலத்த அணிகளுக்காகவும் விளையாடிய அம்பதி ராயுடு ஆகியோர் தலா 8 இறுதிப் போட்டிகளில் களம் கண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் டிஜே பிராவோ ஆகியோர் தலா 7 முறை பைனலில் விளையாடி இந்த வரலாற்றுப் பட்டியலில் டாப்-6 இடங்களுக்குள் இணைந்து மாஸ் காட்டியுள்ளனர்.
ஐபிஎல் அரங்கில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் பல மெகா சாதனைகளைப் படைத்திருந்தாலும், அதிக முறை இறுதிப் போட்டிக்குச் சென்ற வீரர்களின் இந்த டாப்-6 பட்டியலில் அவர்களால் இடம் பிடிக்க முடியவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
