அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த  நெருக்கடியை பாகிஸ்தான் அப்படியே தூக்கி குப்பையில் வீசியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் கட்டாயமாகக் கையெழுத்திட வேண்டும் என்றும், இதில் இணைய மறுப்பவர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடையாது என்றும் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் சவூதி அரேபியா, கத்தார், துருக்கியுடன் சேர்த்து பாகிஸ்தானுக்கும் பகிரங்கமாக அஜண்டா செட் செய்திருந்தார்.

ஈரானுடனான அமைதிக்கு இந்த உடன்படிக்கை அவசியம் என டிரம்ப் பிரஷர் கொடுத்த நிலையில், இதற்குப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிப் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளனர்.

“நாங்கள் எந்தவொரு கட்டாயத்திற்கும் பணிய முடியாது; ஒரு நாள் கூட சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத நம்பகத்தன்மை இல்லாதவர்களுடன் ஒரே மேஜையில் அமர முடியாது” என டிரம்ப் முகத்திலேயே கரியைப் பூசும் வகையில் சீறியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்க மறுக்கும் சூழலில், 1967ஆம் ஆண்டின் எல்லைகளின்படி கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமைவதை இஸ்ரேல் அனுமதிக்கும் வரை, அவர்களை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவதில்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக நிற்கிறது.

இருப்பினும், வல்லரசு நாடான அமெரிக்காவின் தொடர் அழுத்தங்கள் காரணமாகப் பாகிஸ்தான் தனது இந்த  நிலைப்பாட்டைச் சீக்கிரமே மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். ஒருவேளை அமெரிக்காவுக்குப் பயந்து பாகிஸ்தான் தனது கொள்கையை விலைபேசி இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால், அது அந்நாட்டுக்குள்ளேயே புதியதொரு உள்நாட்டுப் போரையும் மிகப்பெரிய விசித்திரத் தலைவலியையும் உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

டிரம்ப் வெர்சஸ் பாகிஸ்தான் இடையே வெடித்துள்ள இந்த சர்வதேச மோதல், தற்போது வளைகுடா அரசியல் களத்தில் பெரும் த்ரில்லரைக் கிளப்பியுள்ளது!