ஐபிஎல் 2026 சீசன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும், அதன் கேப்டன் ரிஷப் பந்திற்கும் ஒரு மோசமான கனவாக அமைந்துவிட்டது. புள்ளிப் பட்டியலில் அந்த அணி கடைசி இடத்தைப் பிடித்தது.

இந்த கடுமையான அழுத்தத்திற்கு மத்தியில், கடந்த மே 20 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, நேரடி தொலைக்காட்சி நேர்காணலில் ரிஷப் பந்த் ஆத்திரத்தில் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது இந்த சர்ச்சையில் ரிஷப் பந்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஒளிபரப்பாளர்களான பிராட்காஸ்டர்களின் அணுகுமுறை மீதே கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாதிப்புக்குள்ளான கேப்டனுக்குப் போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கவாஸ்கர் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார். போட்டி முடிந்த அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே, அதுவும் கடைசி ஓவர் வரை சென்று தோற்ற ஒரு கேப்டனிடம் நேர்காணல் எடுப்பது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை தரும் என்று அவர் கேட்டுள்ளார்.

இந்த கடுமையான வெயிலில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு, அணியும் தோற்றுப் போன விரக்தியில் பந்த் போன்ற ஒரு கலகலப்பான வீரரே கோபப்படுகிறார் என்றால், ஒளிபரப்பாளர்கள் தங்கள் விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

“>

 

போட்டி முடிந்ததும் முதலில் ‘ஆட்ட நாயகன்’ விருதை வழங்கிவிட்டு, தோற்ற கேப்டன் கொஞ்சம் மூச்சு விடவும், தனது எண்ணங்களைச் சேகரிக்கவும் கூடுதல் நேரம் கொடுக்க வேண்டும் என்றும், அவர் முகத்திற்கு நேராக உடனே மைக்கை நீட்டுவது சரியல்ல என்றும் கவாஸ்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.