பாலிவுட் பிரபல நடிகை சோனம் கபூர் – ஆனந்த் அஹிஜா தம்பதியினர், லண்டனின் புகழ்பெற்ற நாட்டிங் ஹில் (Notting Hill) பகுதியில் சுமார் 51 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய பிளாட்டுகளை வாங்கியுள்ளது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தாங்கள் வாங்கியுள்ள இந்த புதிய பிளாட்டுகளை, தங்களுடைய வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கான பிரத்யேக இடமாக மாற்ற இந்த நட்சத்திர தம்பதியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோனம் கபூர் தம்பதியின் இந்த திடீர் முடிவுக்கு லண்டன் நாட்டிங் ஹில் பகுதியின் உள்ளூர்வாசிகள் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். “தங்களது பண பலத்தைக் காட்டி, எங்களது பாரம்பரியமிக்க, அமைதியான குடியிருப்புப் பகுதியை சோனம் கபூர் தம்பதியினர் ஒட்டுமொத்தமாகச் சிதைக்கப் பார்க்கிறார்கள்” என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளதால், இந்த விவகாரம் பாலிவுட் தாண்டி உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது!
