இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் யூடியூப் வியூஸ்களுக்காக கன்டென்ட் கிரியேட்டர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. சர்தக் சச்தேவா என்ற பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர், ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸ் சீட்டை இலவசமாகப் பெறுவதற்காக, தனக்குக் கழுத்து மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது போலப் பொய் நாடகமாடி நெக் பெல்ட் மற்றும் ஸ்லிங் அணிந்து ஏர்போர்ட்டுக்குச் சென்றுள்ளார்.
அவரது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஏர் இந்தியா பெண் ஊழியர், அவருக்கு உடனடியாக பிசினஸ் கிளாஸ் சீட்டிற்கு இலவசமாக அப்கிரேட் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ”இது வெறும் ஒரு வேடிக்கையான சோஷியல் எக்ஸ்பெரிமென்ட் தான், யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை” என்று அந்த இன்ஃபுளூயன்சர் விளக்கம் அளித்த போதிலும், இணையத்தில் நெட்டிசன்கள் அவர் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Meet Instagram Influencer Sarthak 👏
– Bro pretended to have a hand injury at the airport, and at the ticket counter he used his fake injury to upgrade his normal ticket to business class. 😭 pic.twitter.com/WSovK0jskn
— Sumit (@beingsumit01) May 24, 2026
“இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களால், உண்மையில் உடம்புக்கு முடியாமல் வரும் நிஜமான நோயாளிகளை ஏர்லைன் ஊழியர்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்படும்; இவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” எனப் பலரும் கொந்தளித்து வருகின்றனர். அதேநேரம், சில நெட்டிசன்கள் அந்த வீடியோவில் அவர் நுழைந்த கேட் எண் 1, பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கானது என்பதைச் சுட்டிக்காட்டி, “இவர் ஏற்கனவே பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துவிட்டு வியூஸ்க்காகப் பொய் நாடகமாடி வீடியோ எடுத்துள்ளார்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
