ஜப்பான் நாட்டில் கடற்பகுதியில், ‘குனி-சான்’ என்ற டைவிங் பயிற்றுவிப்பாளர் ஆழ்கடலில் சாகசம் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அவர் கடலின் அடியில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அங்கே மர்மமான முறையில் ஒரு ஆழமான ஓட்டை இருப்பதைக் கண்டுள்ளார். சட்டென்று தான் கையில் வைத்திருந்த நீருக்கடியில் பயன்படுத்தும் கேமராவை அந்த ஓட்டைக்குள் அவர் போட, அது கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக கீழே இறங்கி சில நொடிகளில் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது.

இந்த விசித்திரமான காட்சி பார்ப்பவர்களைத் திகைக்க வைத்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கடலுக்கு அடியில் இருக்கும் அந்த ஓட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து நெட்டிசன்கள் விதவிதமான கதைகளை உருட்ட ஆரம்பித்துள்ளனர்.

<a href=”http://

“>

சிலர் அந்த ஓட்டைக்குக் கீழே பெரிய குகை இருக்கலாம் என்று சொல்ல, சில கற்பனைவாசிகளோ, “ஒருவேளை கீழே இருக்கும் சாத்தான் தான் கேமராவை இழுத்துட்டு போயிருச்சோ” என்று கமெண்ட் அடித்து பீதியைக் கிளப்பியுள்ளனர். அதேநேரம், இது கேமரா ஆங்கிள் காட்டிய ஏமாற்றமாக இருக்கலாம் என்றும், சிலர் இது எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்றும் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ, விண்வெளியை விட கடல் தான் பல மர்மங்களை ஒளித்து வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ மக்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.