பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, காப்பீட்டுத் துறையில் பாலிசிதாரர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மார்ச் 23, 2018 அன்று பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ. 14.22 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கிய சமுந்தர் சிங் என்பவர், 25 நாட்களுக்குப் பிறகு மாரடைப்பால் காலமானார்.
மேலும் பாலிசி வாங்கியபோது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை மறைத்ததாகக் கூறி, அவரது குடும்பத்திற்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலிசிதாரர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததற்கான நம்பகமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க காப்பீட்டு நிறுவனம் தவறிவிட்டது என்று கூறியது.
மேலும், மருத்துவ அறிக்கைகளில் கையொப்பம் இல்லாமை மற்றும் பிற குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், காப்பீட்டு நிறுவனம் வெறும் ஊகங்களின் அடிப்படையில் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்தது. இதனால், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Lok Adalat) முந்தைய உத்தரவை உறுதிசெய்த உயர்நீதிமன்றம், அந்தப் பெண்மணியின் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது.
