சமூக ஊடகங்களில் தினமும் பலதரப்பட்ட வீடியோக்கள் வைரலாவது வழக்கம். குறிப்பாக, சண்டை சச்சரவுகள் தொடர்பான வீடியோக்கள் நெட்டிசன்களின் கவனத்தை மிக விரைவாக ஈர்த்துவிடுகின்றன.

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் இரண்டு ரிக்‌ஷா ஓட்டுநர்கள் நடுரோட்டில் கடுமையாகச் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரே ஒரு பயணியை ஏற்றுவதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம், பின்னர் பெரிய தகராறாக முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

சண்டையின் தீவிரத்தைப் பார்த்து அந்த ரிக்‌ஷாவில் இருந்த பயணி கீழே இறங்கிச் சென்ற பிறகும், அந்த ஓட்டுநர்கள் சண்டையை நிறுத்தாமல் ஒருவரையொருவர் சாலையில் விழுந்து விழுந்து தாக்கியுள்ளனர்.

சண்டையின் போது அங்கிருந்த பொதுமக்கள் பலரும் அதை வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் தடுத்து நிறுத்த முன்வராததால் அவர்கள் நீண்ட நேரம் நடுரோட்டிலேயே சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.

‘@gharkekalesh’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “ஒரு சவாரிக்கு போய் இப்படியா சண்டை போடுவது?” என்று தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

சிறிய விஷயங்களுக்குக் கூட மக்கள் தங்கள் நிதானத்தை இழந்து எப்படிச் சண்டையிடுகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் இந்த வீடியோ, இணையத்தில் மீம்ஸ்கள் மற்றும் வேடிக்கையான கமெண்ட்டுகளுடன் வைரலாகி வருகிறது.