சமூக ஊடகங்களில் நடனம், உடற்பயிற்சி எனப் பலதரப்பட்ட வீடியோக்கள் தினமும் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வித்தியாசமான வீடியோ, பார்ப்பவர்களைப் பெருத்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், இரண்டு வாலிபர்கள் ஒரு பெரிய தடியைத் தங்களது தோள்களில் தாங்கிப் பிடித்துள்ளனர்; அவர்களுக்கு நடுவே மற்றொரு வாலிபர் அந்தத் தடியைப் பிடித்தபடி காற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக அப்படித் தொங்கும் நபர் ‘புல்-அப்ஸ்’ உடற்பயிற்சி செய்வார் என்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் நடக்கிறது; தொங்கும் நபர் அப்படியே ஒரே இடத்தில் அசையாமல் நிற்க, தடியைத் தோளில் சுமக்கும் மற்ற இருவர் மட்டும் கீழே அமர்ந்து அமர்ந்து எழுகின்றனர்.

காற்றில் தொங்கும் நபர் ஈர்ப்பு விசையே இல்லாதது போல அப்படியே காற்றில் மிதப்பது போன்ற இந்த விசித்திரமான காட்சிதான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ‘chaman_verma7453’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chaman Verma (@chaman_verma7453)

“>

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பை கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர். சிலர், “இங்கே புவிஈர்ப்பு விசை எங்கே போனது?” என்றும், “இது 1000 சதவீதம் எடிட் செய்யப்பட்ட வீடியோ” என்றும் பதிவிட்டு வர, வேறு சிலரோ, “நண்பா, மொத்தக் சூழலையே மாத்திட்டீங்க!” என நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.