மனதை நெகிழ வைக்கும் ஒரு பாசிட்டிவ் வீடியோ தற்போது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் இதயங்களையும் வென்று அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. தனது சொந்த நிலத்தில் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்கள் அனைத்தும், எந்தவித சேதமும் இல்லாமல் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டதை நேரில் பார்த்த 75 வயது விவசாயி ஒருவர், அளவில்லா மகிழ்ச்சியில் தாளம் தட்ட முடியாமல் குழந்தை போல துள்ளி குதித்து தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

​வியர்வையும் உழைப்பும் வீண்போகாமல், கையில் பலனாகக் கிடைத்த அந்த நொடியில், அந்த முதியவர் காட்டிய அக்மார்க் கிராமத்து மகிழ்ச்சி பார்ப்பவர் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது. “விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்ற வரிகளுக்கு இலக்கணமாகத் திகழும் இந்த 75 வயது உழைப்பாளியின் வைரல் வீடியோ, சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருவதுடன், இன்றைய நாளின் மிகச்சிறந்த நெகிழ்ச்சியான பதிவாகவும் மாறியுள்ளது.